செளந்தர்யா ரஜினிக்கு விவாகரத்து. அடுத்த திருமணம் எப்போது?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இளையமகள் செளந்தர்யாவுக்கும் இளம் தொழிலதிபர் அஸ்வின் அவர்களுக்கும் கடட்ந்ஹ 2010ஆம் ஆண்டு திருமணம் நடந்து இருவருக்கும் ‘வேத்’ என்ற மகன் உள்ளார்.

இந்த நிலையில் திடீரென இருவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் பரஸ்பரம் பிரிய முடிவெடுத்து விவாகரத்துக்கு மனுதாக்கல் செய்தனர்.

இந்த மனு சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் கடந்த மாதம் இருவரும் நேரில் ஆஜராகி விவாகரத்து முடிவில் உறுதியாக இருப்பதாக தெரிவித்தனர்

இந்த நிலையில் நேற்று இந்த வழக்கின் தீர்ப்பு வெளியானது. இதில் செளந்தர்யாவுக்கு விவாகரத்து அளிக்கப்பட்டது. ஆனால் மறுதிருமணம் குறித்து இருவருமே எந்த கருத்தையும் இதுவரை தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது