ரஜினிகாந்தின் இளையமகள் சௌந்தர்யாவின் மகன் வேத் கிருஷ்ணாவின் மூன்றாவது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இந்த பர்த்டே பார்ட்டியில் வேத்வின் பெரியப்பா தனுஷ், பெரியம்மா ஐஸ்வர்யா மற்றும் அனிருத் என அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

கணவரிடம் விவகரத்து பெற்று பெற்றோருடன் வசித்து வரும் ரஜினியின் இளையமகள் சௌந்தர்யாவின் மகன் வேத் கிருஷ்ணாவின் பிறந்த நாள் விமரிசையாக கொண்டாடப்பட்டது. தொழிலதிபரான அஸ்வின் சௌந்தர்யா திருமணம் 2010ஆம் ஆண்டு நடந்தது. 2015ஆம் ஆண்டு சௌந்தர்யாவுக்கும் அஸ்வினிக்கும் வேத் என்ற மகன் பிறந்தார். பின் 2017ஆம் ஆண்டு சௌந்தர்யா அஸ்வினிடமிருந்து விவாகரத்து பெற்று விட்டு தனியாக வசித்து வருகிறார்.

நேற்று பிறந்த நாள் விழாவில் தனுஷ், ஐஸ்வர்யா மற்றும் இசையமைப்பாளர் அனிருத் கலந்து கொண்டனர். இந்த விழாவில் அனிருத் தனது அக்காவான சௌந்தர்யாவின் மகன் பிறந்த நாள் விழாவில் டி சர்ட் அணிந்து வந்தார். ரொம்பவும் சின்ன பையனாக இருக்கிறார் அனிருத்.அதுபோல தனுஷ் சௌந்தர்யாவின் மகனை அழகாக கொஞ்சும் போட்டோவை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ரஜினியும் பேரனின் பிறந்தநாள் கேக் வெட்டிவதை ஆர்வமாக பார்த்து ரசிக்கின்றார்.

சௌந்தர்யா தனது ட்விட்டரில்,தனக்கு ஒரு ஏஞ்சல் போன்ற மகன் வந்தது என் அதிஷ்டம் என்று ட்வீட் செய்துள்ளார். சரியாக ரஜினிகாந்த அமெரிக்கா சுற்றுபயணத்தை முடித்து விட்டு பேரனின் பர்த்டே பங்ஷனில் கலந்து கொண்டுள்ளார்.