சினிமா விழாக்களில் நடிகைகள் அணிந்து வரும் உடை குறித்து பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கூறியுள்ள கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

திருப்பதியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட் எஸ்.பி.பி “சினிமா விழாக்களுக்கு என்ன மாதிரியான உடை அணிந்து வரவேண்டும் என நடிகைகளுக்கு தெரியவில்லை. உடலை காட்டும் உடைகளை அணிந்து வந்தால்தான் வாய்ப்பு கிடைக்கும் என அவர்கள் நினைக்கிறார்கள்” எனக்கூறினார்.

இதையும் படிங்க பாஸ்-  சொப்பன சுந்தரி நிகழ்ச்சிக்கு தடை - கமிஷனரிடம் மனு

இதற்கு தெலுங்கு சினிமா உலகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நாம் ஜனநாயக நாட்டில் வாழ்கிறோம். பெண்கள் எப்படி உடை அணிய வேண்டும். எப்படி அணியக்கூடாது எனக் கூறும் உரிமை யாருக்கும் இல்லை” என பலரும் கூறி வருகின்றனர்.