நான் நலமுடனே இருக்கிறேன்: வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த எஸ்.பி.பி.

10:45 காலை

தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளிலும் சேர்த்து சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஹிட் பாடல்களை பாடி சாதனை படைத்தவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். திரைத்துறைக்கு வந்து 50 வருடங்களை கடந்துவிட்ட நிலையில், அதை கொண்டாடும் விதமாக வெளிநாடுகளில் இசைக் கச்சேரி நடத்தி ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். இந்நிலையில், எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு திடீரென்று உடல்நிலை சரியில்லை என்றும், அதனால், அவர் பங்குகொள்ளவிருந்த பல்வேறு நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டதாகவும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவியது.

இதுகுறித்து எஸ்.பி.பாலசுப்பிரமணியம் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தனக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பதாக உலகம் முழுவதும் எனக்கு போன் வருகிறது. நான் நலமாகவே இருக்கிறேன். என்னுடைய சகோதரி சமீபத்தில் உயிரிழந்துவிட்டார், அதற்காகவே என்னுடைய நிகழ்ச்சிகளை ரத்து செய்தேன். மற்றபடி, நான் நலமாகவே இருக்கிறேன். சளி, இருமல் என்று மருத்துவமனைக்கு சென்றால்கூட அதை பெரிதாக்கி வதந்தி பரப்புகிறார்கள்.

எதற்காக என்னைப் பற்றி இந்த வதந்திகளை பரப்புகிறார்கள் என்று எனக்கு புரியவில்லை. தேவையில்லாத வதந்திகளால் பலரும் வருத்தமடைகிறார்கள். இதுமாதிரியான வதந்திகளை இனியும் பரப்பாதீர்கள். நான் நலமுடனே இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

The following two tabs change content below.
s அமுதா

s அமுதா

இவர் செய்திகள் பிரிவிற்கு ஒரு வருடகால அனுபவம் வாய்ந்தவர்.மருத்துவம் மற்றும் மகளிருக்கான கட்டுரைகள் எழுதுவதில் அனுபவம் வாய்ந்தவர். ஆங்கிலத்திலிருந்து தமிழ் மொழிப்பெயர்ப்பு செய்வதில் நல்ல புலமை உள்ளவர். இந்த வலைதளத்தில் இவர் தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் சின்னத்திரை தொடர்பான செய்திகளில் கவனம் செலுத்தி வருகிறார். தொடர்புகொள்ள- amukrishnan.b@gmail.com