வேகமாக கார் ஓட்டி ஆட்டோக்கள் மீது மோதி அங்கிருந்த 3 கார்களை சேதப்படுத்தினார் என்பது விக்ரமின் மகன் நடிகர் துருவ் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு. சமீபகாலத்தில் அருண் விஜய், ஜெய், மனோஜ் உட்பட இது போல குற்றச்சாட்டுக்களில் சிக்கியுள்ளனர்.

நடிகர் சங்கமும், காவல்துறையோடு சேர்ந்து உரிய விழிப்புணர்வை தான் சார்ந்த சங்கத்தினரிடம் ஏற்படுத்தினால் அனைவருக்கும் உபயோகமாகவும் திரும்பவும் அந்த தவறை செய்யாமல் இருப்பார்கள் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.