‘கத்தி’யை அடுத்து மீண்டும் ஏ.ஆர்.முருகதாஸ் உடன் இணைந்த லைகா

இளையதளபதி விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ‘கத்தி’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்குள் வந்த லைகா நிறுவனம் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘2.0’ மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்கும் ‘சபாஷ் நாயுடு உள்பட பல திரைப்படங்களை தயாரித்து வருகிறது.

இந்த நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு, ராகுல் ப்ரித்திசிங் நடித்துள்ள அதிரடி ஆக்சன் படமான ‘ஸ்பைடர்’ படத்தின் தமிழ் பதிப்பின் ரிலீஸ் உரிமையை லைகா நிறுவனம் பெற்றுள்ளது. இந்த படத்தை லைகா ரிலீஸ் செய்யவுள்ளதால் உலகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் புரமோஷன் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மகேஷ்பாபு, ராகுல் ப்ரித்திசிங், எஸ்.ஜே.சூர்யா, பரத், ஆர்ஜே பாலாஜி உள்பட பலர் நடித்துள்ள ‘ஸ்பைடர்’ படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவும், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பும் செய்துள்ள இந்த படம் வரும் செப்டம்பரில் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது