சென்னை மெரினா கடற்கரையில் பொங்கிய பஞ்சு நுரைகள் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

கஜா புயல் டெல்டா மாவட்டங்களை புரட்டிப்போட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இன்னும் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், இன்று மாலை மெரினா கடற்கரையில் வெள்ளை நிறத்தில் நுரைகள் பொங்கி வழிந்தன. இதனை அங்கு வந்தவர்கள் ஆச்சர்யத்துடன் பார்த்தனர்.

கஜா புயல் காரணமாக கடலில் ஏற்பட்டுள்ள மாற்றத்தால் இப்படி நுரைகள் பொங்கியதோ என அங்கிருந்த சிலர் கேள்வி எழுப்பினர். இதுகுறித்து கடல்சார் ஆராய்ச்சியாளர்கள்தான் ஆராய்ந்து கூற வேண்டும் என சென்னை வாசிகள் கருதுகிறார்கள்.

நேற்று காலை முதல் சென்னையில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.