ஸ்பான்சரே சொல்லிட்டான், ஓவியா தான் வின்னர்

விஜய்டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியை அனேகமாக பார்க்காதவர்கள், பேசாதவர்கள் இருக்க முடியாது. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெறுபவர் யார் என்பது கிட்டத்தட்ட 99 சதவிகிதத்தினர் கூறுவது ஓவியாவைத்தான். ஓவியாவைத்தவிர வேறு யாரையாவது வின்னராக விஜய் டிவி அறிவித்தால், அந்த டிவியின் பெயர் பெரிய டேமேஜை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும்

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியை ஸ்பான்சர் செய்வது விவோ என்ற ஸ்மார்ட்போன் கம்பெனி என்பது அனைவரும் தெரிந்ததே. இதில் ஓவியா ஆர்மியினர் கண்டுபிடிப்பு என்னவென்றால் இந்த VIVO என்ற ஆங்கில எழுத்துக்களை திருப்பி போட்டால் அது OVIA என்ற ஆங்கில வார்த்தைதான் வருகிறது.

எனவே ஸ்பான்சரே சொல்லிட்டான் ஓவியாதான் வின்னர் என்று டுவிட்டரில் டிரெண்ட் ஆகி வருகிறது. இந்த புதிய கண்டுபிடிப்புக்கு நிச்சயம் நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்று கலாய்ப்பவர்களும் உண்டு