இன்று இந்திய திரை உலகின் மற்றுமொரு கருப்பு தினம். 54 நான்கு வயதே ஆன நடிகை ஸ்ரீ தேவியின்  மறைவு செய்தி திரைஉலகில் ஆழ்ந்த துக்கத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. 1969 ஆம் தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி சமீபத்தில் வெளியான மம்மி படம் வரை, பல மொழி திரைப்படங்களில் நடித்து, பல முதன்மை விருதுகளை வென்று, தனது நடப்பில் பலரை கவர்ந்து இன்றுவரை ஊடகங்களில் முதன்மையாகப் பேசப்பட்ட பெண் சூப்பர் ஸ்டாராக வளம் வந்தார் நடிகை ஸ்ரீதேவி. இவரின் திடீர் மறைவில் சினமா உலகம் துக்கத்தில் ஆழ்ந்துள்ளது. குடும்ப திருமண நிகழ்ச்சி ஒன்றுக்கு துபாய் சென்றிருந்த இவர், இந்திய நேரப்படி நேற்றிரவு 1 மணிக்கு துபாயில் மாரடைப்பு காரணமாக இறந்துவிட்டார் என அவரின் குடும்பத்தினர் தெரிவித்தனர். அவரின் உடல் இன்று இரவு 8 மும்பை வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவரின் கடைசி வழி அனுப்புதலுக்காக மிகுந்த துக்கத்துடன் ரசிகர்கள் அவரது வீட்டின் முன் கூடிய வண்ணம் உள்ளனர். சிறந்த நடிகையான ஸ்ரீ தேவியின் மறைவுக்கு சினி ரிப்போர்ட்டர்ஸ் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறது.