தமிழ் சினிமாவில் 80களில் முன்னணி நாயகியாக விளங்கிய ஸ்ரீதேவி தமிழ் நாட்டின் சிவகாசியை பூர்விகமாக கொண்டவர். இவர் 80களின் நடுப்பகுதியில் ஹிந்தி திரைப்படங்களில் நடித்து அதன் மூலம் இந்தியா முழுவதும் தெரியப்படும் நடிகையானார்.

பாலிவுட்டின் முன்னணி நடிகையாக விளங்கிய ஸ்ரீதேவி பாலிவுட்டின் முன்னணி தயாரிப்பாளர் போனி கபூரை மணந்து கொண்டார்.

சமீபத்தில் துபாய் சென்றிருந்த ஸ்ரீதேவி மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார் .இது திரையுலகினருக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தற்போது ஸ்ரீதேவியை போற்றும் வகையில் சுவிஸ் ரசிகர்கள் முடிவு செய்து உள்ளனர் விரைவில் அவருக்கு சிலை திறக்கப்படுமென சுவிஸ் நாட்டு நிர்வாகிகள் அறிவித்து உள்ளனர்

இயக்குனர் யாஷ் சோப்ராவுக்கு ஏற்கனவே இண்டர்லகான் என்ற இடத்தில் சிலை வைக்கப்பட்டுள்ளது. அவர் இயக்கிய பல படங்களில் ஸ்ரீதேவி நடித்தது குறிப்பிடத்தக்கது.