பழம்பெரும் தமிழ், இந்தி நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 54

 

தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட இந்தியாவின் பல மொழி திரைப்படங்களில் நடித்த பழம்பெரும் நடிகை ஸ்ரீதேவி. இவர் நேற்று தனது கணவர் மற்றும் மகளுடன் துபாயில் நடைபெறும் திருமணம் ஒன்றில் கலந்து கொள்ள சென்றிருந்தார். அப்போது நேற்றிரவு 11 மணியளவில் ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் அவர் மரணம் அடைந்தார். இந்த தகவலை அவரது உயிர் பிரியும்போது உடனிருந்த அவரது கணவர் போனிகபூர் உறுதி செய்தார்.

இந்த நிலையில் துபாயில் இவர் கடைசியாக எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.