பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜூலி மற்றும் நடிகர் ஸ்ரீ காதலித்து வருவதாக ஏற்கனவே கிசுகிசு கிளம்பிய நிலையில் ஸ்ரீயின் ஃபேஸ்புக்கில் ‘நான் ஜூலியை காதலிக்கின்றேன்’ என்றும் பதிவு செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நேற்று ஸ்ரீ உடல்நலக்கோளாறு காரணமாக வெளியேற்றப்பட்டார். இதுகுறித்து ஸ்ரீயின் ஃபேஸ்புக்கில் ‘எனக்கு காய்ச்சல் என்று பொய் கூறி வெளியே வந்துவிட்டேன்’ என்று கூறப்பட்டிருந்தது.

ஆனால் மேற்கண்ட இந்த இரண்டு ஸ்டேட்டஸ்களும் பொய்யானவையாம். ஏனெனில் ஸ்ரீ பெயரில் அந்த ஃபேஸ்புக் அக்கவுண்டை யாரோ ஆரம்பித்து இப்படி ஒரு கிசுகிசுவை கிளப்பியுள்ளார்களாம்.