நடிகர் கமல்ஹாசனின் மய்யம் இயக்கத்தில் முக்கிய பொறுப்பில் இருப்பவர் நடிகர் ஸ்ரீபிரியா. இவர் அமைச்சர் ஜெயக்குமாரை விமர்சித்து கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ஜெயக்குமாரை பொறுத்தவரை நடிகர் கமல்ஹாசனை தொடர்ந்து விமர்சித்து வருகிறார். சமீபத்தில் கமல்ஹாசன் காங்கிரஸ் தலைவர் ராகுலை சந்தித்தார். அதற்கு பதிலளித்த ஜெயக்குமார்,அவர் அமெரிக்க அதிபர் டிரம்பை கூட சந்திப்பார். இதனால் என்ன ஆகிவிடப்போகிறது? என்று நக்கலாக கமெண்ட் அடித்தார்.

இந்த நிலையில் ஸ்ரீபிரியா அமைச்சர் ஜெயக்குமாருக்கு பதிலடி கொடுக்க துவங்கியுள்ளார் ஸ்ரீபிரியா. அவர் கூறுகையில், காமெடிக்கு என்று ஒரு துறையை வைத்து ஆட்சி நடத்துவது அதிமுக மட்டுமே. அதுவும் அந்த துறைக்கு அமைச்சரான ஜெயக்குமார் செய்யும் காமெடிக்கு அவர்களே சிரித்துகொள்கின்றனர் என்று கமெண்ட் செய்துள்ளார்.