இயற்கை சீரழிவுகளில் மக்களுக்கு உதவுவதை ராகவா லாரன்ஸை பார்த்து மற்றவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என நடிகை ஸ்ரீரெட்டி தெரிவித்துள்ளார்.

ராகவா லாரன்ஸ், முருகதாஸ், ஸ்ரீகாந்த் உட்பட பலரின் மீதும் பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீரெட்டி. ஆனாலும், தனது படத்தில் நடிக்க இவருக்கு ராகவா லாரன்ஸ் வாய்ப்பு கொடுத்துள்ளார்.

சென்னையில் தற்போது மழை பெய்து வருகிறது. இன்னும் 2 நாட்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.

இந்நிலையில் ஸ்ரீரெட்டி தனது முகநூல் பக்கத்தில் “என்ன மழை இது. யாரெல்லாம் பிளாட்பாரங்கள் மற்றும் தெருவோரங்களில் வசிக்கிறார்கள் என தெரியவில்லை. கடந்த முறை கேரளா மழையால் பாதிக்கப்பட்ட போது லாரன்ஸ் மாஸ்டர் பெரும் உதவி செய்தார். அவரை முன்னுதாரணமாக கருதி அனைவரும் உதவி செய்ய முன் வரவேண்டும். உதவி செய்த சூர்யா குடும்பத்திற்கும் நன்றி. என்னால் முடிந்ததை நானும் செய்வேன்” எனக்குறிப்பிட்டுள்ளார்.

இதைக்கண்ட ரசிகர்கள் இப்ப மட்டும் லாரன்ஸ் நல்லவரா தெரியுராறா? எனக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.