பட வாய்ப்புகள் தருவதாக கூறி தன்னுடன் உடலுறவு கொண்ட சினிமா பிரபலங்கள் தன்னை ஏமாற்றிவிட்டனர் என சமீபத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார் தெலுங்கு கவர்ச்சி நடிகை ஸ்ரீ ரெட்டி. இவரது பயோபிக் தற்போது தமிழில் வர உள்ளது. இந்த படத்தில் அவரே நடிக்க உள்ளது சிறப்பம்சம். இந்நிலையில் தற்போது இதுகுறித்து கூடுதல் தகவல் ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.

தெலுங்கு மற்றும் தமிழ் சினிமா உலகில் முன்னணில் உள்ள பல நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் சினிமா துறையை சேர்ந்தவர்களின் பெயர்களை வெளியிட்டு அவர்கள் தனக்கு பட வாய்ப்பு தருவதாக கூறி உடலுறவு கொண்டனர். ஆனால் வாய்ப்பு தராமல் என்னை ஏமாற்றிவிட்டனர் என கவர்ச்சி நடிகை ஸ்ரீ ரெட்டி கூறி வந்தார்.

இந்நிலையில் அவரது வாழ்க்கை வரலாறு படத்தை தமிழில் அலாவுதீன் என்பவர் இயக்க உள்ளார். சித்திரை செல்வன் மற்றும் ரவிதேவன் ஆகியோர் இணைந்து இந்த படத்தை தயாரிக்க உள்ளார்கள். ஸ்ரீ ரெட்டி நடிக்க உள்ள அவரது வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகவைத்து உருவாக்கப்பட உள்ள இந்த படத்துக்கு ரெட்டி டைரி என பெயரிட்டுள்ளனர்.

ஸ்ரீ ரெட்டியின் வாழ்க்கையில் நடந்த அனைத்து சம்பவங்களும் இந்த படத்தில் இடம்பெறும் என அதிரடியாக அறிவித்தனர். இதனால் படம் வெளியாகும் போது ரெட்டி டைரியில் மேலும் பல பிரபலங்கள் பெயர்கள் வெளியாகலாம் என திரையுலகம் அஞ்சியது. இந்நிலையில் தன் வாழ்க்கையை பற்றி படம் எடுத்தால் ஒரு பாகத்தில் எடுக்க முடியாது. குறைந்தது ஐந்து பாகங்களாவது எடுக்க வேண்டும் என தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஸ்ரீ ரெட்டி கூறி அனைவரையும் மலைக்க வைத்துள்ளார்.