ஸ்ரீரெட்டியுடன் மிரட்டி படுக்கையை பகிர்ந்த அந்த இயக்குனர் யார்?

Sri reddy

திரையுலகில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லை குறித்து சமீபகாலமாக பலர் தைரியமாக கூறிவருகின்றனர். மலையாளத்தில் பார்வதி உள்ளிட்ட பல நடிகைகள் பாலியல் தொல்லைகள் குறித்து ஓப்பனாக பேசிவருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக தெலுங்கு திரையுலகை கலங்கடித்து வருபவர் நடிகை ஸ்ரீரெட்டி. பல சம்பவங்களை புகைப்ப ஆதாரத்துடன் கூறிவருகிறார் இவர்.

இந்த நிலையில் சமீபத்தில் ஸ்ரீ ரெட்டி அளித்த பேட்டியில் , தமிழில் ஒரு இயக்குனர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்து, படுக்கையையும் பகிர்ந்துகொண்டார் என பரபரப்பு புகார் கூறியுள்ளார். அந்த இயக்குனரின் விபரத்தையும் விரைவில் தெரிவிப்பேன் என்றும் கூறியுள்ளார். ஸ்ரீரெட்டி கூறும் அந்த இயக்குஅன்ர் யார் என தெரிந்துகொள்ள கோலிவுட் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.