தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி சமீபகாலமாக சினிமாவில்
தனக்கு பாலியல் கொடுத்த நடிகர்கள், இயக்குனர்கள்,
தயாரிப்பாளர்கள் பெயர்களையும், படங்கைளயும்
வெளியிட்டு திரைத்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியவர்.

இதனிடையே ‘சண்டக்கோழி 2’ விழாவில் நடிகர் விஷால்
தன்னை பற்றி பேசியபோது சிரித்ததற்கு கீர்த்தி சுரேஷை
சமூகவலைத்தளத்தில் “உங்களது சிரிப்பை நான்
எப்போதும் மறக்க மாட்டேன். நினைவில் வைத்துக்
கொள்ளுங்கள்” என்று காட்டமாக பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், நடிகை ஸ்ரீ ரெட்டி அடுத்ததாக தெலுங்கு
நடிகை ஹேமா மீது தனது கோபத்தை காண்பித்துள்ளார்.

நடிகை ஹேமா ஏற்கனவே “ஸ்ரீரெட்டி அரை நிர்வாண
போராட்டம் நடத்தியது நல்லது அல்ல. இயக்குனர் தனது
பார்வைக்கேற்ப நடிகர், நடிகைகளுக்கு கதைக்கேற்ற
கதாபாத்திரத்தை கொடுப்பார். யாருடைய பரிந்துரையிலும்
வாய்ப்புகள் கொடுப்பது இல்லை. ஸ்ரீரெட்டி திரையுலகினர்
மீது தவறான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்” என்று
கூறியிருந்தார்.

தற்போது அதற்கு ஸ்ரீரெட்டி “ ஹேமா நீங்கள், கூகுள் சி.இ.ஒ
சுந்தர் பிச்சையிடம் சொல்லி உங்களுடையை ஆபாச
வீடியோவை நீக்கச் சொல்லுங்கள். அதன்பிறகு மக்கள்
மத்தியில் நான் ஆடையை கழற்றியது பற்றி பேசுங்கள்.
உங்கள் கருப்பு பக்கத்தை பார்க்காமல் எனது
போராட்டத்தை பற்றி பேசாதீர்கள். என்னைப் பற்றி
தெரியாமல் நீங்கள் கருத்து சொன்னால், நீங்கள்
எதிர்பார்க்க முடியாத அளவுக்கு எனது அதிரடியை பார்க்க
வேண்டி இருக்கும்” என்று சமூகவலைத்தளத்தில் காட்டமாக
கருத்து தெரிவித்துள்ளார். இதனால், தெலுங்கு திரையுலகில்
மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.