a r murugadoss

ஏற்கனவே சர்கார் பட போஸ்டர் பிரச்சனையில் சிக்கி தவிக்கும் இயக்குனர் ஏஆர் முருகதாசுக்கு தற்போது மற்றொரு பிரச்சனை பூதமாக கிளம்பி இருக்கிறது. சினிமா உலகத்தையே புரட்டி போட்டி கொண்டிருக்கும் நடிகை ஸ்ரீரெட்டி தன் பேஸ்புக்கில் ஒரு போஸ்ட் போட்டுள்ளார். ஹாய் முருகதாஸ்ஜி, கிரீன் பார்க் ஹாட்டல் நினைவிருக்கா என்று பதிவிட்டுள்ளார்.

இயக்குனர் முருகதாஸ், விஜய் சர்க்கார் பட போஸ்டர் பிரச்சனை குறித்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ளது. விஜய் தம்மடிப்பது போல உள்ள போஸ்டர் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. விஜய், முருகதாஸ், சன் பிக்சர்ஸிடம் தலா ரூ.10 கோடி கேட்டு தொடரப்பட்டுள்ள வழக்கு குறித்து அவர்கள் பதிலளிக்குமாறு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஒரு சிகரெட்டிற்கு இத்தனை கோடியா? என்று வாயடைந்து நிற்கிறது சினிமா வட்டாரம். விஜய் ரசிகா்களும் சிகரெட் காட்சிக்கு இத்தனை அக்கபோரா என்று கொந்தளிப்பில் உள்ளனர். விஜய் படம் என்றாலே பிரச்சனை தானாகவே வந்து விடுகிறது. சர்க்கார் பிரச்சனையில் இருக்கும் இயக்குனர் முருகதாசுக்கு அடுத்த அடியை கொடுத்திருக்கிறார் தெலுங்கு திரையுலகை மிரட்டிக்கொண்டிருக்கும் ஸ்ரீரெட்டி, தனது பேஸ்புக்கில் ஒரு போஸ்ட் போட்டுள்ளார்.

sri reddy

ஹாய் தமிழ் இயக்குனர் முருகதாஸ் ஜி.. நலமா? கிரீன் பார்க் ஹோட்டல் நினைவிருக்கிறதா? வெளிகொண்டா ஸ்ரீநினிவாஸ் மூலம் நாம் சந்தித்தோம். பட வாய்ப்பு அளிப்பதாக வாக்களித்தீர்கள். ஆனால் நமக்கு இடையே நிறைய… இதுவரை நீங்கள் எனக்கு எந்த வாய்ப்பும் கொடுக்கவில்லை… நீங்களும் சிறந்தவர் சார்…என்று ஸ்ரீரெட்டி ஃபேஸ்புக்கில் போஸ்ட் போட்டுள்ளார்.

இப்படி நமக்கு இடையே நிறைய என்று கூறி அந்த வாக்கியத்தை முடிக்காமல் புள்ளிகள் மட்டும் வைத்து பீதியை கிளம்பியிருக்கிறார் ஸ்ரீரெட்டி.

ஏற்கனவே ஸ்ரீரெட்டி தமிழ் இயக்குனர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என்றும், அவரின் பெயரை விரைவில் வெளியிடுவேன் என்றும் ஸ்ரீரெட்டி தெரிவித்திருந்தார். முருகதாஸ் தனக்கு படவாய்ப்பு கொடுக்கவில்லை என்பதை போஸ்ட் போட்டுள்ளார் ஸ்ரீரெட்டி.