சில வாரங்களாக ஸ்ரீரெட்டி யார் மீதும் எந்த பஞ்சாயத்தும் கூறாமல் இருந்தார். சில நாட்களாக அமைதியாக இருந்த அவரது சமூக வலைதள பக்கங்கள் மீண்டும் பிஸியாகி விட்டன.

இப்போது அவர் குற்றச்சாட்டு வைத்திருப்பது பிரபல தெலுங்கு இயக்குனர் ராம்கி மீது.

இதையும் படிங்க பாஸ்-  விஜய்-ன் 'கத்தி'- வெளியானது யூடியூபில்!

பிரபல தெலுங்கு இயக்குநர் ராம்கிக்கு நாள்தோறும் இளம் பெண்கள் தேவைப்படுவார்கள் என்றும், இது தொடர்பாக அவர் பேசிய வாட்ஸ் அப் உரையாடல் அவரது முகமூடியை கிழித்தெறியும் என்றும் நடிகை ஸ்ரீரெட்டி அடுத்த குண்டை அனல் தெறிக்க வீசியுள்ளார்.

இதையும் படிங்க பாஸ்-  ரஜினி-முருகதாஸ் புதிய படத்தின் தயாரிப்பாளர் யார்?

தனது முகநூல் பக்கத்தில், இயக்குனர் ராம்கியின் வாட்ஸ் அப் உரையாடலை வெளியிட்டு‘‘இதனை எனக்கு எஸ்.எம். என்பவர் அனுப்பி வைத்தார். பாலியல் தேவைக்கு இளம்பெண்களை ராம்கி கேட்டு இருக்கிறார். அவரைப்பற்றி தெரிந்து கொள்ளுங்கள்’’ என்றுகண்டித்து கருத்து பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க பாஸ்-  காரியம் முடிந்ததும் உணவு கூட கொடுக்காமல் கை விட்டனர்-ஸ்ரீரெட்டி கண்ணீர்

தெலுங்கு டி.வி விவாதங்களில் ஸ்ரீரெட்டியின் பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ராம்கி ஆரம்பத்தில் இருந்தே எதிராக பேசி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ராம்கி மீதானஸ்ரீரெட்டியின் புகார் தெலுங்கு பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.