தினமும் ஒரு பரபரப்பு பற்ற வைத்து ஏதாவது ஒரு சினிமா பிரபலங்களின் மீது பகீர் புகார் கூறி வருபவர் ஸ்ரீரெட்டி. இதுவரை ஸ்ரீகாந்த், ஏ.ஆர் முருகதாஸ்,சுந்தர் சி, ராகவா லாரன்ஸ் உட்பட பலர் மீது தொடர் பாலியல் புகார் கூறிவந்தவர் ஸ்ரீரெட்டி.

கடந்த வாரம் ராகவா லாரன்ஸ் விடுத்த டான்ஸ் மற்றும் ஆக்டிங் சேலஞ்சுக்கு சம்மதித்து தொடர் டான்ஸ் வீடியோக்களை தனது பேஸ்புக் பேஜில் பதிந்து வந்த ஸ்ரீரெட்டி ஒரு வார காலமாக அமைதி காக்கிறார்.

திடீரென்று பிரபலமான அவரது பேஸ்புக் பேஜ் பல மில்லியன் ரசிகர்களை பெற்றது. அவரை பாலோ செய்து வரும் ரசிகர்கள் ஏதாவது பரபரப்பு தகவல் வராதா என்று அவரது பேஜை வலம் வருகின்றனர்.

தொடர் அமைதி காப்பது பதுங்கி பாயவா என்பதும் தெரியவில்லை.