பல முன்னணி இயக்குனர்கள், மற்றும் நடிகர்கள் மீது தொடர் பாலியல் புகார்களை கூறியபடி இருப்பவர் ஸ்ரீரெட்டி தான் ஒரு சாதாரண விஜயவாடாவை சேர்ந்த பக்தி சார்ந்த எப்போதும் ஹோமங்களும் பூஜைகளும் நடைபெறும்
ஒரு ஆர்த்தோடாக்ஸ் குடும்பம் என்றும் தன்னை இவ்வாறு பயன்படுத்தி ஏமாற்றி விட்டனர் என்றும் சினிமா வாய்ப்புக்காகத்தான் இது போல நடந்து ஏமாந்து விட்டேன் என்றும்
மற்ற பெண்களும் இது போல மாட்டிக்கொள்ளக்கூடாது என்பதற்காக உண்மைகளை சொல்கிறேன் என ஸ்ரீரெட்டி பல பேட்டிகளில் கூறிவிட்டார்.
மேலும் முன்னணி நடிகைகளான நயன்தாரா, திரிஷா, காஜல் அகர்வால் உள்ளிட்டோர் வாயைத் திறந்தால் பலரின் பெயர்கள் வெளியே வரும் என ஸ்ரீரெட்டி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இதுகுறித்து நடிகை திரிஷாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இது குறித்து பேசிய அவர் மொதல்ல எனக்கு ஸ்ரீரெட்டின்னா யாருன்னே தெரியாது. தேவையில்லாம பேசி ஸ்ரீரெட்டிய பெரிய ஆளா ஆக்க வேண்டாம் என திரிஷா தெரிவித்தார்.
மூத்த நடிகைகள், மற்றும் வளர்ந்து வரும் நடிகைகள் என பலர் நாம் ஒழுங்காக இருந்தால் நம்மை யாரும் நெருங்க முடியது, ஒழுங்கான நபர்களுடன் பயணித்தால் இதுபோன்ற பிரச்சனை வராது என அவர்கள் தெரிவித்தனர்.