தெலுங்கு தமிழ் கதாநாயகர்கள் மற்றும் இயக்குனர்களின் பெயர்களை தினம் ஒருவராக வெளியிட்டு அவர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை சொல்பவர் ஸ்ரீரெட்டி. இவர் மீது வழக்கு தொடரப்படும் என இயக்குனர் சுந்தர் சி கூறியிருக்கிறார். இவரின் குற்றச்சாட்டுக்களுக்கு பதில் சொல்லி என் மதிப்பை தாழ்த்தி கொள்ள விரும்பவில்லை என லாரன்ஸ் கூறுகிறார் எது உண்மை என ஆண்டவனுக்கு மட்டுமே தெரியும்.

இது சாதாரண விசயமாக தெரியவில்லை ஏனோ தானோவென்று குற்றச்சாட்டு சொல்வதற்கு, அதுவும் முக்கிய கலைஞர்களை எல்லாம் இவர் சொல்கிறார் என்றால் எதுவும் ஆதாரமில்லாமல் இருக்காது என்பதே சினிமா ஆர்வலர்களின் கருத்து.

சினிமாவில் பல வருடங்களாகவே இது போல விசயங்கள் மறைமுகமாக நடப்பதாக சொல்லப்படுவதுண்டு.

ஸ்ரீரெட்டியும் ஒரு தனியார் யூ டியூப் சேனல் பேட்டியில் லாரன்ஸால் இன்னொரு பெண் பாதிக்கப்பட்டுள்ளார் என அடுத்த குண்டை தூக்கி போட்டுள்ளார்.

உண்மையில் ஸ்ரீரெட்டி சொல்வது போல அந்த ஸ்பாட்டுக்கு யாரும் போகாமல் இருந்திருந்தால் அவர்கள் இந்த குற்றச்சாட்டை கண்டு அஞ்ச போவதில்லை ஏனென்றால் அபாண்ட பழி ஒருவர் மீது வரும்போது அதை எதிர்கொள்ளும் துணிவுதான் கண்டிப்பாக வரும்.

உண்மையில் சென்று இருந்தால் அவர்கள் உண்மையில் மன அமைதியோடு இருக்க முடியாது ஏனென்றால் சமுதாயத்தில் மிக மோசமான பெயரை இது பெற்றுத்தரும் அதுவும் ஸ்ரீரெட்டியிடம் ஆதாரம் இல்லாமல் இவ்வளவு பெயர்களை இவ்வளவு போல்டாக சொல்ல முடியாது அவரிடம் ஏதோ வெயிட்டான ஆதாரமான வீடியோவோ புகைப்படங்களோ இருக்கும் என்றே பலரால் எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்ரீரெட்டியின் அடுத்த கட்ட மூவ் என்னவாக இருக்கும் என்பது பலரின் எதிர்பார்ப்பு.

சினிமாவுக்கு வரும் பெண்கள் பாதிக்கப்பட கூடாது என்பதற்காகவே இதை நான் வெளியிட்டு வருகிறேன் நான் பாதிக்கப்பட்டாலும் பரவாயில்லை என ஸ்ரீரெட்டி கூறியிருக்கிறார்