நடிகை ஸ்ரீரெட்டி. இதுதான் இன்று திரையுலகில் பரபரப்பாக பேசப்படும் பெயர். தெலுங்கு திரையுலகில் வீசிய அவரது புயல் இன்று தமிழ் திரையுலகைல் மையம் கொண்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஸ்ரீகாந்த்,லாரன்ஸ்,முருகதாஸ் ஆகியோர் படவாய்ப்பு தருவதாக கூறி தன்னை ஏமாற்றினார்கள் என பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த நிலையில் இன்று மீண்டும் ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். அதில்

Sri reddy

அரண்மனை படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்தபோது அந்த படத்தின் எக்ஸிகியூட்டிவ் தயாரிப்பாளர் கணேஷ் என்பவர் என்னை தொடர்பு கொண்டு தனது அடுத்த படத்தில் முக்கியமான வேடத்தில் நடிக்க 200 சதவீதம் வாய்ப்பு தருவதாக கூறி உறுதியளித்தார். அடுத்த நாள் என்னை தொடர்பு கொண்ட அவர் ஹோட்டல் ஒன்றுக்கு அழைத்து அவருடனும், இயக்குநர் சுந்தர் சி உடனும் செக்ஸ் வைத்துக்கொள்ள வேண்டும் என்றார். அதற்கு பின்னர் என்ன நடந்தது என்பது பெருமாளுக்கு தெரியும். ஆனால் அந்த ஃப்ராட் கணேஷ் எனக்கு பட வாய்ப்பு தரவில்லை என கூறியுள்ளார்.