மறைந்த நடிகை ஸ்ரீதேவி நடிக்கவிருந்த ஒரு படத்தில் அவருக்கு பதிலாக மாதுரி தீட்சித் நடிக்கும் தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூா் தற்போது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் இயக்குநா் அபிஷேக் வர்மன் இயக்கும் ஷிட்டட் படத்தில் நடிகை ஸ்ரீதேவி நடிக்கவிருந்தார். அவா் மறைந்ததால் அந்த கேரக்டரில் நடிகை மாதுரி தீட்சித் நடிப்பது உறுதியாகியுள்ளது.நடிகை ஸ்ரீதேவி எதிர்பாரத விதமாக இறந்த காரணத்தால் இந்த படத்தை கைவிட்டதாக படக்குழு தெரிவித்திருந்தது.

ஷிட்டட் படத்தில் நடிகை ஸ்ரீதேவிக்கு பதிலாக மாதுரி தீட்சித் நடிப்பதாக உள்ள தகவல வெளியாகியுள்ளது. இந்நிலையில் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த தகவலை பதிவிட்டுள்ளார். அதில் அபிஷேக் வா்மனின் இந்த படமானது என் அம்மாவின் மனதிற்கு மிகவும் நெருக்கமானது. இந்த படத்தில் அம்மாவிற்கு பதிலாக மாதுரி தீட்சித் நடிப்பதற்கு நான், தங்கை குஷி மற்றும் எனது தந்தை ஆகியோர் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம் எனக் கூறியுள்ளார்.