மது போதையில் குளியல் தொட்டியில் மூழ்கி பிரபல நடிகையான ஸ்ரீதேவி கடந்த பிப்ரவரி மாதம் 24ம் உயிர் இழந்தார். ஆனால் அவரது மரணத்தில் பலருக்கும் சந்தேகம் இருப்பதாக கூறப்பட்டது. ஸ்ரீதேவியின் மரணம் இயற்கையாக நிகழ்ந்தது இல்லை. அது திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலையாக இருக்கலாம் ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டது. இந்நிலையில் ஓய்வு பெற்ற டெல்லி துணை போலீஸ் கமிஷனர் வேத் பூஷன் நடிகை ஸ்ரீதேவியின் மரணம் கொலை தான் என்று தெரிவித்துள்ளார்.

துபாயில் நடந்த நாத்தனார் மகனின் திருமணத்திற்கு சென்ற ஸ்ரீதேவி அங்குள்ள ஹோட்டல் அறையில் இருந்து குளியல் தொட்டியில் விழுந்து உயிர் இழந்ததாக செய்திகள் வந்தன. திருமணம் முடிந்து நடிகை ஸ்ரீதேவி மட்டும் தனியாக துபாயில் இருந்தார். போனி கபூர் மும்பை வந்து விட்டார். பின் ஸ்ரீதேவியை காணும் பொருட்டு திரும்ப அவர் மட்டும் துபாய் சென்றார். அதன் பின் தான் நடிகை ஸ்ரீதேவி மது கலக்கத்தில் குளியலறையில் உள்ள தொட்டியில் மூழ்கி உயிர் இழந்தார்.

ஸ்ரீதேவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பலரும் தெரிவித்தனர். இதனால் துபாய் அரசு தீவிர விசாரணைக்கு பின் மூன்று நாட்கள் கழித்து தான் அவரது உடலை ஒப்படைத்தனர். ஏற்கனவே அவரது மரணம் குறித்து சந்தேகம் இருப்பதாக கூறி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று இயக்குனர் சுனில் சிங் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு அளித்தார். 5.7 அடி உயரமுள்ள ஸ்ரீதேவி 5.1 அடி உள்ள குளியல் தொட்டியில் எப்படி மூழ்கி உயிர் இழக்க முடியும் என்று கேள்வி எழுப்பியிருந்தார். உச்சநீதிமன்றம் இந்த மனுவை விசாரித்து அதில் எந்தவித உண்மையும் இல்லை என்று கூறி தள்ளுபடி செய்தது.

இன்று வரை நடிகை ஸ்ரீதேவியின் மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் இருந்து தான் வருகிறது. இப்படி அவரது மரணம் குறித்து பலருக்கும் சந்தேகம் உள்ள நிலையில் உள்ள ஓய்வு பெற்ற டெல்லி துணை போலீஸ் கமிஷனர் வேத் பூஷன் ஸ்ரீதேவியின் மரணம் இயற்கை அல்ல திட்டமிட்ட கொலை தான் என்று தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில், துபாயில் ஸ்ரீதேவி தங்கியிருந்த ஜூமைரா எமிரேட்ஸ் டவர்ஸ் ஹோட்டல் அறையை பார்வையிட சென்றோம். ஆனால் அந்த அறையிக்குள் எங்களை அனுமதிக்க இல்லை. எனவே பக்கத்து அறையில் தங்கி அங்கு என்ன நடந்திருக்கும் என்று விசாரித்தோம். அவர் மரணத்தில் ஏதோ ஒரு மர்மம் உள்ளது. எதையோ மறைக்கிறார்கள் என்று வேத் தெரிவித்துள்ளார்.

வேத் தனியார் துப்பறியும் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். குளியல் தொட்டியில் ஒருவரை வலுக்கட்டாயமாக தள்ளி தான் நீரில் மூழ்கி அவர் மூச்சு திணறும்படி அழுத்தி செய்யும் போது தான் தடயமே இல்லாமல் செய்து விட்டு அது தானாக நடந்தது போல காட்டலாம் என்று அவர் கூறியுள்ளார்.