‘ஐம்பதிலும் ஆசை வரும்’ என்று ஒரு பாடல் உண்டு. அந்த ஆசையை அடிக்கடி திரையுலக ஜோடிகள் சிலர் வெளிப்படுத்துவதும் உண்டு. நடிகை ஸ்ரீதேவிக்கும், பாலிவுட் தயாரிப்பாளர் போனிகபூருக்கும் கடந்த 1996ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் என 2 மகள்கள் உள்ளனர். இருவரும் வளர்ந்து ஆளாகிவிட்டதுடன் விரைவில் நடிகைகளாக அறிமுகமாக உள்ளனர். ஸ்ரீதேவி, போனிகபூர் இருவருக்கும் 50 வயது கடந்துவிட்டது. இன்னமும் புதுமணத் தம்பதிகள்போல் பாசத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.

     

      குடும்பத்துடன் அடிக்கடி விழாக்களுக்கும், வெளிநாடு சுற்றுலாவுக்கும் ஸ்ரீதேவி சென்று பொழுதை கழிக்கிறார். அந்த படங்களை இணையதள பக்கங்களில் பகிர்ந்தும் வருகிறார். சில தினங்களுக்கு முன் தனது இணையதள பக்கத்தில் ஒரு புகைப்படம் வெளியிட்டார் ஸ்ரீதேவி. அதைப்பார்த்தவர்கள் புருவத்தை உயர்த்தி ஆச்சர்யத்தில் ஆழ்ந்தனர். ஸ்ரீதேவி கன்னத்தில் போனிகபூர் முத்தமிடும் காட்சிதான் அது. இணைய தளத்தில் இது வைரலாக பரவி வருகிறது.