இந்தி திரையுலகில் சுமார் பத்தாண்டு காலம் கொடிகட்டி பறந்த ஒரே தமிழ் நடிகை ஸ்ரீதேவிதான். அவருக்கு முன்பு வைஜெயந்தியமாலா போன்றவர்களும், அவருக்கு பின்னர் பல நடிகைகளும் இந்தி படங்களில் நடித்திருந்தாலும் பாலிவுட்டில் நம்பர் ஒன் இடத்தை தொட முடியவில்லை

இந்த நிலையில் கடந்த 1987ஆம் ஆண்டு ‘மிஸ்டர் இந்தியா’ என்ற படத்தில் நடிக்க அப்போதே அவருக்கு ரூ.11 லட்சம் சம்பளம் தரப்பட்டிருந்தது. அப்படியென்றால் அந்த பணம் இன்றைய மதிப்பிற்கு எவ்வளவு இருக்கும் என்று கணக்கு போட்டு பார்த்து கொள்ளுங்கள்

இந்த படத்தின் தயாரிப்பாளரும் பின்னாளில் கணவருமாக மாறியவருமான போனிகபூரிடம் ஸ்ரீதேவி கேட்டது ரூ.10 லட்சம் தான். ஆனால் போனிகபூர் அவருக்கு ரூ.11 லட்சம் சம்பளமாக அளித்தார்.