கபாலி படத்தை அடுத்து ரஜினி நடித்து வெளிவந்துள்ள படம் காலா. தொடர்ந்து ரஞ்சித் இயக்கத்தில் வந்துள்ள இந்த படம் கலைவையான விமர்சனத்தை பெற்றுள்ளது. வசூலும் எதிர்ப்பார்த்த அளவிற்கு இல்லை என்றும் கூறப்படுகிறது.

ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு பிறகு வெளிவந்துள்ள இந்த படத்தின் வசூல் பாதிப்பிற்கு கார்ணம் ரஜின்யின் தூத்துக்குடி பயணமும் ஒரு காரணம். காலா படத்தில் போராட்டமே முக்கிய பங்கு வகிக்க, போராடினால் தமிழக சுடுகாடாக மாறும் என்ற ரஜினியின் பேச்சு தமிழக மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க பாஸ்-  ஷங்கரின் '2.0' படம் குறித்து சர்ச்சை கருத்தை வெளியிட்ட ராம் கோபால் வர்மா!

இந்த நிலையில் இப்படத்தை பார்த்த இலங்கையைச் சேர்ந்த நடிகர் ரஞ்சன் ராமனாயக்க கடுமையாக தனது கருத்தினை பதிவு செய்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், நான் ரஜினிகாந்தின் தீவிர ரசிகன். இப்படம் எனக்கு மிகவும் ஏமாற்றமாக அமைந்தது. சூப்பர்ஸ்டார் அந்தஸ்தில் இருக்கும் ரஜினி ஏன் இந்த மாதிரி படத்தில் நடிக்கிறார் என தெரியவில்லை. ஷங்கர், ராஜமௌலி போன்ற பிரமாண்ட இயக்குனர்களுடன் இணைவது தான் அவருக்கு அழகு. இனி ரஞ்சித் படங்களில் நடிக்காதீர்கள் என்று கூறினார்.

இதையும் படிங்க பாஸ்-  கண்டக்டர் முதல் சூப்பர்ஸ்டார் வரை -பாடபுத்தகத்தில் ரஜினிகாந்த் !