தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத துணை நடிகராக இருப்பவர் ஸ்ரீமன். பாலாவின் சேது படத்தில் இவரது வேடம் பலரையும் சென்றடைய வைத்தது. தொடர்ந்து கமல்ஹாசன், விஜயகாந்த்,விஜய்,சூர்யா என அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். சில படங்களில் ஹீரோவாகவும் நடித்தார். அந்த படங்கள் படு தோல்வியை சந்தித்தன.

தற்போது ஸ்ரீமன் தனது டுவிட்டர் பக்கத்தில் பிச்சைக்காரன் போன்ற வேடங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். ஆனால் அது குறித்த விளக்கம் எதையும் பதிவிடவில்லை. மேலும் எனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியான இப்புகைபடங்களுக்கும் பாலா படத்திற்கு தொடர்பு இல்லை என்றும் கூறியுள்ளார்.