நடிகை ஸ்ரீப்ரியா பிக்பாஸ் முதல் சீசன் தொடங்கிய போதே அது பற்றிய தன்னுடைய
கருத்துக்களை அவ்வப்போது ட்விட்டா் பக்கத்தில் பதிவிட்டு வருவது வழக்கம். பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்கிறார் என்ற ஒரு காரணத்திற்காகவே அதை அனைவரும் பார்த்து வந்தனர். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றிய கருத்துக்களை நடிகை ஸ்ரீப்ரியா மற்றும் சதீஸ் தங்களது வலைத்தள பக்கத்தில் பதிவிட்டி வந்தனர்.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் கமல் அரசியலுக்கு வருவது பற்றி அனைத்து மக்கள் மத்தியில் பேசினார். பிக்பாஸ் மேடையை தனது அரசியல் பயணத்திற்கு ஒரு அடிகோலாக பயன்படுத்தினார். அதன் பின் அரசியல் கட்சியை ஆரம்பித்த கமல்,தனது கட்சியின் கொடி சின்னம் ஆகியவற்றை அறிமுகப்படுத்தினார். மக்கள் நீதி மய்யம் கட்சியை கமல் தொடங்கினார். கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்து பணியாற்றி வருகிறார் நடிகை ஸ்ரீப்ரியா.

கமலின் மக்கள் நீதி மய்யத்தின் மாநில செயற்குழு உறுப்பினாராக இருக்கிறார் நடிகை
ஸ்ரீப்ரியா. கடலூர் மாவட்ட மக்கள் நீதி மய்யத்தின் புதிய நிர்வாகிகள் அறிமுக விழா கடந்த திங்கட் கிழமை நடந்தது. கடலூர் டவுன்ஹாலில் நடைபெற்ற புதிய நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய ஸ்ரீப்ரியா, எல்லோரும் நடிகர்களுக்கு அரசியல் பற்றி என்ன தெரியும் என்று கேட்கிறார்கள். சொல்லப்போனால் கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா அனைவரும் நடிகர்களாக இருந்து தான் அரசியலுக்கு அடிஎடுத்து வைத்தார்கள். எனவே நடிகர்கள் அரசியலுக்கு வருவது தப்பில்லை. ஆனால் மக்களுக்கு நல்ல சேவை செய்ய வேண்டும். அதனால் தான் கமல் மக்களுக்கு சேவை செய்யும் மனப்பான்மையுடன் வந்திருக்கிறார்.

மேலும் பேசிய மக்கள் நீதி மய்யத்தின் மாநில செயற்குழு உறுப்பினரான நடிகை ஸ்ரீப்ரியா, மாதம் 1 ரூபாய் சம்பளம் என்று கூறிக்கொண்டு நாட்டை கொள்ளையடிக்க மாட்டோம் உண்மையான அரசியல்வாதியாக தான் கமல்ஹாசன் இருப்பார். நம்ம தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவில் உள்ள அனைத்து மக்களுக்கும் மறதி அதிகமாக தான் உள்ளது. கொள்ளையடித்தவர்களை தான் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற செய்து இருக்கிறார்கள்.

அதுபோல குறிப்பாக பெண்கள் அரசியல் அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும். அப்போது தான் நல்ல சிந்தித்து செயல்பட முடியும். எனவே மாற்றம் தேவை என்பதை சிந்தித்து மக்கள் யார் நல்லவர் என்பதை அறிந்து வாக்களிக்க வேண்டும் என்று கடலூர் கூட்டத்தில் பேசினார்.