BiggBoss season 3 – பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் நடிகை ஸ்ரீரெட்டி கலந்து கொள்ளப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே பிக்பாஸ் சீசன் 1 மற்றும் 2 வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், தற்போது பிக்பாஸ் 3வது சீசன் விரைவில் வெளியாகவுள்ளது.
இந்த சீசனையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்குகிறார். எனவே, இந்த முறை பிக்பாஸ் வீட்டுக்குள்ளே யார் யார் போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த முறை கலந்து கொள்ளப்போகும் பிரபலங்களில் பட்டியலும் வெளியாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியின் புரோமோ வீடியோவை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஸ்ரீரெட்டியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தெரிகிறது. ஆனால், அவர் அதிகமாக சம்பளம் கேட்பதாக கூறப்படுகிறது. எல்லாம் ஒத்து வந்தால் இந்நிகழ்ச்சியில் ஸ்ரீரெட்டி கலந்து கொள்வார் எனத் தெரிகிறது. அதேபோல், நடிகை ஆல்யா மானஷா, நடிகர் எம்.எஸ். பாஸ்கர், சாக்‌ஷி அகர்வால் உள்ளிட்டோரும் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.