வருமானவரி பாக்கி: மறைந்த ஸ்ரீவித்யாவின் வீடு ஏலம்!

09:48 மணி

மறைந்த முன்னாள் பழம்பெரும் நடிகை ஸ்ரீவித்யாவின் வீட்டை வரிப்பாக்கி செலுத்ததால் வருமானவரித்துறையினர் ஏலத்தில் விட போவதாக நோட்டீஸ் வெளியிட்டுள்ளது.

ரஜினி,கமல், பிரபுஉள்ளிட்ட நடிகா்களுடன் நடித்த ஸ்ரீவித்யாவை தமிழ் சினிமாத்துறை எப்போதும் மறக்க முடியாது. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் நடித்தவா். முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்த இவா் அம்மா, வில்லி,அண்ணி உள்ளிட்ட பல கேரக்டரில் நடித்துள்ளார். இவா் தனது இறுதி கால கட்டத்தில் கேரள நடிகரும் கணேஷ்குமார் பராமரிப்பில் இருந்து வந்தார். புற்று நோயால் பாதிக்கப்பட்டு 2006ஆம் ஆண்டு திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் இறந்தார்.

சென்னை அபிராமபுரத்தில் உள்ள அவருக்கு சொந்தமான வீடு நடனப்பயிற்சி பள்ளியாக செயல்பட்டு வருகிறது. ஸ்ரீவித்யா இந்த வீட்டிற்று நீண்ட காலமாக வருமான வரியை செலுத்தாமல் பாக்கி வைத்திருக்கிறார்களாம். இந்நிலையில் இந்த வீட்டை வருமான வரித்துறையினரால் சோதனை நடத்தப்பட்டது. எனவே ஸ்ரீவித்யாவின் வருமான வரி பாக்கியை ஈடு செய்ய அவரது அபிராமபுரம் வீட்டை ஏலத்தில் விட வருமான வரித்துறை முடிவு செய்துள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பு 1250 சதுர அடி கொண்ட இதன் மதிப்பு ரூபாய் ஒரு கோடியே 17 லட்சத்து 10ஆயிரம் மதிப்பு கொண்டது.இது மார்ச் 27ம் தேதி ஏலத்திற்கு வருகிறது.

இது குறித்து வருமான வரித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் ஸ்ரீவித்யாவிடம் இருந்து வரவேண்டிய வருமான வரி பாக்கி,வட்டி,ஏலச் செலவுத் தொகையை வசூல் செய்வதற்காக அவரது வீடு ஏலம் விடப்படுவதாக விளக்கம் அளித்துள்ளது.

 

The following two tabs change content below.
s அமுதா

s அமுதா

இவர் செய்திகள் பிரிவிற்கு ஒரு வருடகால அனுபவம் வாய்ந்தவர்.மருத்துவம் மற்றும் மகளிருக்கான கட்டுரைகள் எழுதுவதில் அனுபவம் வாய்ந்தவர். ஆங்கிலத்திலிருந்து தமிழ் மொழிப்பெயர்ப்பு செய்வதில் நல்ல புலமை உள்ளவர். இந்த வலைதளத்தில் இவர் தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் சின்னத்திரை தொடர்பான செய்திகளில் கவனம் செலுத்தி வருகிறார். தொடர்புகொள்ள- amukrishnan.b@gmail.com