அவருடன் கூட இருப்பது அப்பாவுடன் இருப்பதுபோல ஒரு பீலிங்: பிரபல நடிகை பேட்டி

திமிரு படம் மூலம் பிரபலமானவர் நடிகை  ஸ்ரேயா ரெட்டி. அந்த படத்தின்போது நடிகர் விஷால் அண்ணனுட்டன் காதல் ஏற்பட்டு திருமணம் செய்துகொண்டார். பின்னர் திரையுலகை விட்டு விலகியிருந்த அவர் சுமார் 9 ஆண்டுகளுக்கு பின் நடித்திருக்கும் படம் அண்டாவ காணோம். அது மட்டுமின்றி இயக்குனர் பிரியதர்சன் இயக்கத்தில் சில சமயங்களில் என்ற படமும் ரிலிசுக்கு தயாராக உள்ளது.

இது குறித்து  ஸ்ரேயா பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அதில் ஏற்கெனவே பிரியதர்சன் இயக்கத்தில் காஞ்சிவரம் என்ற படத்தில் நடித்துள்ளேன். இதனால் 9 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் நடிப்பதால் எவ்வித பதட்டமும்  இல்லை. மேலும் பிரியதர்சன்  கூட  இருப்பது அப்பாவுடன் இருப்பதுபோல ஒரு பீலிங்தான் எனக்கு வருகிறது.