அம்மாவாக புரமோசன் ஆகும் சோனா

சில வருடங்களுக்கு முன் கவர்ச்சி வேடங்களில் கலக்கியவர் நடிகை சோனா. சிவப்பதிகாரம் தொடங்கி பல படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடித்துள்ளார். இடையில் ஒரு படத்தையும் தயாரித்து நஷ்டம் அடைத்தார். பின்னர் வெங்கட் பிரபு, எஸ்.பி.பி.சரண் ஆகியோர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர்.

இந்த நிலையில் திரையில் சில காலம் காணாமல் போன சோனா தற்போது அம்மா கேரக்டருக்கு புரமோசன் ஆகியுள்ளார்.  நான் யாரென்று நீ சொல் என்ற படத்தில் நாயகிக்கு அம்மாவாக நடிக்கிறார். இனி சோனாவை எவ்விதமான கேரக்டர்களிலும் காணலாம் என்று அவர் கூறியுள்ளார்.