திமுக தலைவர் ஸ்டாலின் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் மறைவிற்கு பின்னர், செயல் தலைவராக இருந்த ஸ்டாலின் திமுகவின் தலைமைப் பொறுப்பை ஏற்றார். பின் பல்வேறு கூட்டங்களில் கலந்துகொண்டு அதிமுக அரசை கடுமையாக விமர்சித்து பேசி வந்தார். அதிமுகவை ஒழிப்பதே தனது லட்சியம் என காட்டமாக கூறி வந்தார்.

இந்நிலையில் ஸ்டாலின் தற்பொழுது ஆயிரம் விளக்கு பகுதியிலுள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. சிறுநீர் தொற்று காரணமாக அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இது வழக்கமான செக்கப் தான் என்றும் சிகிச்சைக்குப் பிறகு அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தியைக் கேட்ட அவரது தொண்டர்கள் மருத்துவமனை முன்பு குவிந்துள்ளனர்.