தனக்கு வந்த தடைகள் அனைத்தையும் அசால்ட்டாக உடைத்தெரிந்து திமுக தலைவர் பதவியை அடைந்துள்ளார் மு.க.ஸ்டாலின். திமுக பொருளாளர், திமுக செயல் தலைவர் என அழைக்கப்பட்ட ஸ்டாலின் தற்போது திமுக தலைவர் ஸ்டாலின் என அழைக்கப்படுகிறார்.

ஒரு காலத்தில் ஸ்டாலின் தலைமையை ஏற்க முடியாது, ஸ்டாலின் இருக்கும் வரை திமுக உருப்படாது, ஸ்டாலினை தலைவராக விட மாட்டேன் என கங்கங்கணம் கட்டிக்கொண்டு சுற்றிவந்த மு.க.அழகிரி கூட தற்போது ஸ்டாலினை தலைவராக ஏற்க தயார் என அதிரடியாக அறிவித்துள்ளார்.

ஸ்டாலினுக்கு எதிராக கூட்டத்தை கூட்டி நெருக்கடி கொடுக்கலாம் திமுகவில் நம் ஆதிக்கத்தை செலுத்தலாம் என திட்டம் போட்டுக்கொண்டு செயல்பட்டு வந்த அழகிரி தற்போது தன்னை கட்சியில் சேர்த்துக்கொண்டாலே போது என்ற நிலைக்கு கெஞ்சும் நிலைக்கு வந்துவிட்டார். இதற்கு காரணம் அழகிரி யாருக்கு போன் போட்டு ஆள் சேர்த்தாலும் அனைவரும் கையை விரிக்கிறார்கள்.

வேறு வழியில்லாமல் ஸ்டாலினை தலைவராக ஏற்கிறோம் எங்களை கட்சியில் சேர்த்துக்கொள்ளுங்கள் என அழகிரியையே வெளிப்படையாக பேச வைத்துவிட்டது அவரது தற்போதைய நிலைமை. ஆனால் அழகிரியை கட்சியில் கூட சேர்க்க கூடாது என்பது உறுதியாக இருக்கிறார் ஸ்டாலின். அழகிரியை நன்கு உணர்ந்தவர் ஸ்டாலின். அவரை கட்சியில் சேர்த்துக்கொண்டால், அதன் பின்னர் அவர் எப்படி செயல்படுவார், அவருக்கேற்ற சூழ்நிலை வந்தால் அழகிரியின் காய் நகர்த்தல்கள் எப்படியிருக்கும் எல்லாம் ஸ்டாலினுக்கு நன்றாகவே தெரியும்.

அழகிரி தன்னை நெருங்காமல் இருக்கும் வரை நல்லது என நினைக்கும் ஸ்டாலின் அழகிரியின் திமுக உறுப்பினர் கனவுக்கு கூட நோ சொல்லிவிட்டதாகவும் தகவல் வருகிறது. அழகிரியை மீண்டும் ஒருமுறை கட்சியில் அனுமதிக்க கூடாது என்பதில் பிடிவாதமாக உள்ளார் ஸ்டாலின்.