திமுக தலைவராக இருந்த கருணாநிதி காலமானதையடுத்து அவரது மகன் மு.க.ஸ்டாலின் அடுத்த தலைவராவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

திமுக தலைவராக இருந்த கருணாநிதி உடல்நலம் பாதிக்கப்பட்டு தீவிர அரசியலில் இருந்து விலகி இருந்தபோது அவரது மகன் மு.க.ஸ்டாலின் செயல் தலைவராக நியமிக்கப்பட்டார். தலைவருக்கான அனைத்து பணிகளும் அவரிடமே ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதி நேற்று முன்தினம் மரணம் அடைந்தார்.

இதனையடுத்து மு.க.ஸ்டாலின் முறைப்படி திமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். ஏற்கனவே அறிவித்திருந்தபடி வரும் 19-ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் சென்னை நடக்க உள்ளது. இந்த கூட்டத்திலேயே ஸ்டாலினை தலைவராக அறிவிப்பதற்கான ஆலோசனைகள் நடந்து வருவதாகவும், அதனை முதன்மை செயலாளர் துரைமுருகன் துவங்கிவிட்டதாக கூறப்படுகிறது.

மேலும் பொதுச்செயலாளராக இருக்கும் அன்பழகனையும் வயது முதிர்வின் காரணமாக அந்த பொறுப்பில் இருந்து விடுவித்து துரைமுருகனை அதில் அமர்த்தும் யோசனையும் நடந்து வருகிறது.