சின்னத்திரை தொடர்களில் நடித்து வருபவர் நிலானி, தூத்துக்குடி ஸ்டெர்லைட் பிரச்சினையின்போது போலீஸ் உடையில் தோன்றி போலிசுக்கு எதிராக பேசியதால் போலீசாரால் தேடப்பட்ட இவர் நீண்ட நாட்களுக்கு பிறகு குன்னூரில் கைது செய்யப்பட்டார்.

நிலானிக்கும், சின்னத்திரை உதவி இயக்குநர்  லலித்குமார் என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளாக பழக்கம் இருந்தது. திருமணம் செய்து கொள்வது தொடர்பாக அவர்களுக்கு இடையே கருத்துவேறுபாடு இருந்து வந்தது.
இந்த நிலையில் ஒரு தொலைக்காட்சி தொடர் படப்பிடிப்பில் நிலானி நின்றிருந்தபோது  அங்கு வந்த  லலித்குமார் நிலானியுடன் தகராறில் ஈடுபட்டிருக்கிறார். அவரை  இதனால் படப்பிடிப்பு தளத்தில் பரபரப்பு ஏற்பட்டது. படப்பிடிப்பில் இருந்தவர்கள்  லலித்குமாரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து நடிகை நிலானி, மயிலாப்பூர் போலீஸ் நிலையம் சென்று, காந்தி லலித்குமார் தன்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி தகராறு செய்வதாக புகார் அளித்தார். அதன்பேரில் மயிலாப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
 நிலானியிடம் தகராறில் ஈடுபட்ட அவரது காதலன்  லலித்குமார், நேற்று சென்னை கே.கே.நகர் ராஜா மன்னார் சாலையில் தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார். இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் அவரது உடலில் எரிந்த தீயை அணைத்து, அவரை அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் பலியானார்.