சினிமாவில் எத்தனையோ நடிகர்கள், இயக்குனர்கள் என நாம் அவர்களின் ரசிகர்களாக இருக்கிறோம் ஆனால் ப்ளாக் அண்ட் ஒயிட் காலம் தொட்டு பல படங்களுக்கு புகைப்பட கலைஞராக பணியாற்றியவர் சினிமாவில் அன்று முதல் இன்றுவரை உள்ள பிரபலங்களை மிக வித்தியாச கோணத்தில் படம் பிடித்தவர் ஸ்டில்ஸ் ரவி.

நாம் மிகவும் ரசிக்கும் பிரபலங்களை அழகான கோணத்தில் படம்பிடித்து அன்றுமுதல் இன்றுவரை அசத்திக்கொண்டிருப்பவர் ஸ்டில்ஸ் ரவி அவர்கள்

கூகுளில் சென்று ஸ்டில்ஸ் ரவி என்று ஆங்கிலத்தில் தட்டினால் வந்து விழும் இவர் எடுத்த புகைப்படங்களை பார்க்க இரு கண்கள் போதாது.

பாலச்சந்தர்,இளையராஜா,மணிரத்னம்,கமல், கார்த்திக் ஏ.ஆர் ரஹ்மான்,அஜீத்,விஜய் ,தனுஷ், சிம்பு மற்றும் முன்னணி இயக்குனர்கள் தயாரிப்பாளர்களை எல்லாம் இவர் புகைப்படம் எடுத்த லெவலே வேற லெவல்.இவரின் புகைப்படங்கள் அனைத்துமே வேற வேற லெவல்.

தமிழ் மட்டுமல்லாது தென்னிந்திய படக்கலைஞர்கள் அனைவருக்குமே ஸ்டில்ஸ் ரவியை தெரியும். புகைப்படம் எடுப்பதை வித்தியாசமான கோணத்தில் எடுத்து அவர்கள் வாழ்நாள்முழுவதும் பயன்படுத்தும் அளவுக்கு எடுப்பவர்.

பல வருடங்களாக சினிமாவில் புகைப்பட கலைஞராக மிளிர்ந்து வரும் ஸ்டில்ஸ் ரவியின் பிறந்த தினம் இன்று.