இந்தியன் திரைப்படம் வந்து 22 வருடங்கள் ஆகிறது நீண்ட இடைவேளைக்கு பிறகு வெளிவரும் இப்படம் உக்ரைன் உள்ளிட்ட நாடுகளில் எடுக்கப்படுகிறது. கமலுடன் பிரபல ஹிந்தி நடிகர் அஜய் தேவ்கனும் இணைந்து நடிக்கிறார்.

இந்த படத்தின் கதை விவாதத்தை ஈஸிஆர் சாலையில் உள்ள தன் அதிநவீன பங்களாவில் கதை விவாதம் செய்து வருகிறார் இயக்குனர் ஷங்கர்.

அந்த வீட்டில் எங்கு செல்வதென்றாலும் ரிமோட் கண்ட்ரோல்தான். அருகிலேயே அலுவலகத்தையும் மாற்றிவிட்டார் அங்கும் விவாதங்கள் தொடர்கிறது.

இதுவரை சென்னை தி.நகர் உஸ்மான் சாலையில் இருந்த அலுவலகத்தில்தான் தன் படங்களின் கதை, திரைக்கதை விவாதங்களை செய்துவந்தார், இயக்குநர் ஷங்கர் எனப்து குறிப்பிடத்தக்கது.