நடிகர் சிம்பும் , கவுதம் கார்த்திக்கும் ஒரு புதிய படத்தில் இணைந்து நடிக்கவுள்ளனர்.

தமிழ் சினிமாவில் ஏராளமான படங்களை தயாரித்தவர் ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜா. அந்நிறுவனத்தின் டிவிட்டர் பக்கத்தில் ஒரு மாஸ் அறிவிப்பை அவர் வெளியிட்டார். அதில், தனது தயாரிப்பில் சிம்புவும், கவுதம் கார்த்திக்கும் இணைந்து நடிக்கவுள்ளதாகவும், அப்படத்தை நர்தன் என்பவர் இயக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்த கவுதம் கார்த்திக் ‘ சூப்பர் டேலண்ட் சிம்புவுடன் சேர்ந்து நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த வாய்ப்புக்கு நன்றி’ என பதிவிட்டுள்ளார்.

தனித்தனியாக நடித்து வந்த சிம்புவும், கவுதம் கார்த்திக்கும் முதன் முறையாக சேர்ந்து நடிப்பது சிம்பு ரசிகர்களிடையே மகிழ்ச்சியையும், எதிர்பார்ப்பையும் ஒருசேர ஏற்படுத்தியுள்ளது.