சிம்பு சரியாக படப்பிடிப்புக்கு வருவதாகவும், அவர் 6 மணி படப்பிடிப்புக்கு 5 மணிக்கே வந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்துவதாகவும் பேட்டி ஒன்றில் நடிகர் அரவிந்தசாமி தெரிவித்துள்ளார்

மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு, அரவிந்தசாமி, விஜய்சேதுபதி, அருண்விஜய் ஆகிய நான்கு ஹீரோக்கள் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சிம்பு இந்த படத்தின் படப்பிடிப்புக்கு வருவது குறித்து பேட்டி ஒன்றில் அரவிந்தசாமி கூறியதாவது:

சிம்புவை பற்றி நானும் கேள்விப்பட்டு இருக்கிறேன். அவரின் மற்ற படங்களைப் பற்றி எனக்கு தெரியாது. ஆனால் இந்தப் படத்துக்கு அவர் மிகவும் ஒழுக்கமாக இருக்கார். எங்கள் எல்லோருக்கும் முன்பே வந்து அமர்ந்திருப்பார். காலையில் ஆறு மணிக்கு படப்பிடிப்பு என்றால் நான் 5.40க்கு செல்வேன். ஆனால் அவர் ஐந்து மணிக்கே வந்து உட்கார்ந்துவிடுவார்’ என்று கூறியுள்ளார்.

சிம்பு படப்பிடிப்புக்கு சரியாக வருவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில் அரவிந்தசாமி இவ்வாறு கூறியுள்ளது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.