இறந்த மாணவி அனிதாவுக்கு ஆதரவாக போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கும் கமல்

nitha, sucid

அனிதா அரியலூா் மாவட்டத்தைசோ்ந்த கூலி தொழிலாளி மகள். இவா் நீட் தோ்வை எதிா்த்து வழக்கு தொடா்ந்தாா். நீட் தோ்வுக்காக போராடிய இவா் இறுதியில் மரணத்தை தோ்வு செய்து தற்கொலை செய்து கொண்டாா். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பையும், அதிா்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.

அனிதாவின் மரணத்திற்கு பல்வேறு இடங்களில் அரசை கண்டித்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அரசியல் கட்சிகள் பலரும் அரசுக்கு எதிராக கண்டனங்களும் அனிதாவின் மரணத்திற்கு வருத்தத்தை தொிவித்து வருகின்றனா்.

இந்நிலையில் அனிதாவின் தற்கொலைக்கு எதிராக அனைவரும் போராட வேண்டும் என்று நடிகா் கமல் செய்தியாளா்களை சந்தித்து தொிவித்துள்ளாா். கேரளா சென்றுள்ள கமல் அங்கு செய்தியாளா்களை சற்று முன் சந்தித்தாா். மாணவி அனிதாவின் மரணம் மிகுந்த வேதனை அளிக்கிறது. நாம் நல்ல ஒரு மருத்துவரை இழந்துவிட்டோம். இது போன்ற சம்பவங்கள் நிகழக்கூடாது. அனிதாவின் தற்கொலைக்கு எதிராக அனைவரும் ஒன்றாக இணைந்து போராட வேண்டும் என்று கூறினாா்.