Student Leave letter for watching ajith moive – அஜித் நடித்துள்ள நேர்கொண்ட பார்வை திரைப்படத்திற்கு விடுமுறை கேட்டு கல்லூரி மாணவர் ஒருவர் எழுதிய கடிதம் வைரலாக வலம் வருகிறது.

வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்துள்ள நேர்கொண்ட பார்வை திரைப்படம் நேற்று இந்தியா முழுவதும் வெளியானது. பெண்களின் சுதந்திரம் பற்றி பேசும் இப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும், நேர்மறையான விமர்சனங்களையும் இப்படம் பெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்திற்கு விடுமுறை கேட்டு கல்லூரி மாணவர் ஒருவர் பேராசிரியருக்கு கடிதம் எழுதியுள்ளார். நாகப்பட்டினத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. தன்னுடையை துறை ஆசிரியருக்கு அந்த மாணவர் கடிதம் எழுதியுள்ளார். அதில், அல்டிமேட் ஸ்டர் அஜித் குமார் அவர்கள் படத்த்திற்கு போக இருப்பதால், நாளை 8/08/2019 அன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி என அந்த மாணவர் குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து, அந்த மாணவரின் தந்தையை அழைத்து அந்த ஆசிரியர் கண்டித்ததாக செய்திகள் வெளிவந்துள்ளது.

உடல் நிலை சரியில்லை உள்ளிட்ட பல்வேறு காரணங்களை குறிப்பிட்டு விடுமுறை கடிதம் எழுதப்படும் நிலையில், அஜித் படத்திற்கு செல்ல விடுமுறை கேட்ட அம்மாணவனின் கடிதம் சமூக வலைத்தளங்களில் வைரலாக வலம் வருகிறது.