காவல் அதிகாரி ஒருவர் சிறுமியை மிரட்டி தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்த சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குற்றங்களை தடுக்கும் நிலையில் உள்ள காவல் அதிகாரிகளில் சிலரே குற்றச்செயல்களில் ஈடுபடும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. சமீபத்தில் துரைப்பாக்கத்தில் திருநங்கையுடன் உல்லாசமாக இருந்த காவல் அதிகாரியை மக்கள் கையும் களவுமாக பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். அந்த அதிர்ச்சி அடங்கும் முன் தற்போது மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது.

இதையும் படிங்க பாஸ்-  மீண்டும் நிபா வைரஸ் பீதியில் கேரளா - 23 வயது வாலிபர் பாதிப்பு

சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்தவர் வாசு. இவர் மாதாவரம் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். இவர் வில்லிவாக்கம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

நேற்று இரவு தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 10 வயது சிறுமியை அவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஒடி வந்து வாசுவை அடித்து உதைத்து, சிறுமியை மீட்டனர். விசாரணையில் கடந்த 4 மாதங்களாகவே இவர் அந்த சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளது தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க பாஸ்-  6 ரகசிய கேமராக்கள்! ஆபாச வீடியோவை காட்டி உல்லாசம்...அதிர்ச்சி தகவல்

இவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறி காவல் அதிகாரிகள் அவரை அழைத்து சென்றனர்.