ரஜினி அதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டார். சுப்பிரமணியம் சுவாமி

12:21 மணி
Loading...

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த வாரம் தனது ரசிகர்கள் சந்திப்பின்போது, தான் அரசியலுக்கு வருவது குறித்து சில கருத்துக்களை தெரிவித்துவிட்டு போர் வரும் வரை காத்திருப்போம் என்று கூறினார். ரஜினியின் இந்த பேச்சு தமிழக அரசியலை உலுக்கிவிட்டது. கிட்டத்தட்ட அனைத்து கட்சி தலைவர்களும் ரஜினியின் அரசியல் வருகை குறித்து கருத்து தெரிவித்துவிட்டனர். அனைத்து முன்னணி தொலைக்காட்சியிலும் இதுகுறித்து விவாதங்கள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை ரஜினியை கண்டித்து ஏதாவது கருத்து கூற வேண்டும் என்ற கொள்கையில் இருக்கும் சுப்பிரமணியம் சுவாமி தற்போது மீண்டும் ரஜினியை வம்புக்கு இழுக்கும் வகையில் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது:

தமிழகத்தில் தற்போது உள்ள அரசியல் சூழலுக்கு ரஜினிகாந்த் ஏற்றவர் அல்ல. இந்திய அரசியலமைப்பு சட்டம், அடிப்படை உரிமைகள் முதலியவற்றைப் பற்றி அவருக்கு எதுவும் தெரியாது. அவர் சினிமாவில் நடிப்பதே சிறந்தது. நல்ல வசனங்களை பேசி மக்களை சந்தோஷப்படுத்தலாம்.

அரசியலில் நுழையும் நட்சத்திரங்கள் தமிழகத்திற்கு காமராஜ் செய்ததை பாழாக்கி இருக்கிறார்கள். அப்போது போடப்பட்ட அடிப்படை கட்டமைப்பையும் அழித்துவிட்டார்கள். சினிமா நட்சத்திரங்கள் அரசியலுக்கு வருவதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

(Visited 7 times, 1 visits today)
The following two tabs change content below.
பிரிட்டோ

பிரிட்டோ

பத்திரிக்கை நிருபராக இந்த வலைதளத்தில் பணியாற்றுகிறார். சினிமா தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் நேரில் சென்று பார்வையிட்டு சம்பவ இடத்திலிருந்தே செய்திகள் மற்றும் புகைப்படங்களை உடனுக்குடன் தளத்தில் பதிவேற்றம் செய்கிறார். நிருபர் பணியில் இவர் தமிழில் முன்னனி செய்தி தொலைக்காட்சிகளில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர் தொடர்புகொள்ள- 9600729393