பாஜகவின் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி திமுக குறித்தும், அழகிரி குறித்தும் கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவரை மனநோயாளி என அழகிரியின் மகன் துரை தயாநிதி குறிப்பிட்டுள்ளார்.

சில தினங்களுக்கு முன்னர் சுப்பிரமணியன் சுவாமி செய்தியாளர்களை சந்தித்த போது, திமுகவில் நுழையவிருக்கும் அழகிரி இட்லி கடையை தான் வைக்க முடியும். திமுகவின் அடுத்த தலைவர் ஸ்டாலின் தான் என கூறினார். இவரது இந்த கருத்து அழகிரி தரப்பை கோபமூட்டியிருந்தாலும் அமைதியாக எந்த பதிலடியும் கொடுக்காமல் இருந்தனர்.

இதையும் படிங்க பாஸ்-  விஜய் சேதுபதி வெளியிட்ட உருக்கமான டிவீட்!!!

இந்நிலையில் இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த ஆளூர் ஷ நவாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் தயாநிதி அழகிரியிடம் கேள்வி எழுப்பினார். அதில், அழகிரி இட்லி கடை வைக்கலாம் என நக்கல் அடித்துள்ளார் சுப்பிரமணியன் சுவாமி. கி.வீரமணிக்கு எதிராக பொங்கோ பொங்குனு பொங்கிய தயாநிதி அழகிரி இதற்கு என்ன சொல்கிறார்? ஆசிரியர் என்றால் பாய்வதும், ஆரியர் என்றால் பம்முவதும் ஏன்? என குறிப்பிட்டிருந்தார்.

இதையும் படிங்க பாஸ்-  காலா கரிகாலன் பேரனாக தனுஷ் மகன் ஏன் நடிக்கவில்லை?

இதற்கு அழகிரியின் மகன் தாயாநிதி அழகிரி தனது டுவிட்டரில் பதிலடி கொடுத்துள்ளார். அதில், மனநோயாளிகளுக்கு பதில் சொல்ல விருப்பம் இல்லை, அதுவே காரணம் என கூறியுள்ளார். இதில் அவர் சுப்பிரமணியன் சுவாமியை மனநோயாளி என குறிப்பிட்டுள்ளார்.