கடந்த வாரம் வெளிவந்த அருவி, மாயவன், சென்னை 2 சிங்கப்பூரி ஆகிய படங்கள் ரசிகர்களின் வரவேற்பை பெற்றதோடு நல்ல வசூலையும் செய்து வருகின்றன

இந்த நிலையில் நகுல் நடித்த பிரம்மா.காம் என்ற படமும் கடந்த வெள்ளியன்று வெளியானது. இந்த படம் சென்னை உள்பட அனைத்து நகரங்களிலும் மிகக்குறைந்த திரையரங்குகளில் மட்டுமே ரிலீஸ் ஆகி, போட்ட பணத்தை கூட எடுக்கவில்லை. சென்னையில் இந்த படம் வெள்ளி,சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களிலும் சேர்த்து வெறு ரூ.8 லட்சம் மட்டுமே வசூலாகியுள்ளது.

இதையும் படிங்க பாஸ்-  'அருவி'யும் உருவி எடுக்கப்பட்ட படம் தானா?

இந்த நிலையில் போட்ட பணத்தை கூட தயாரிப்பாளர் எடுக்காத நிலையில் படக்குழுவினர் இன்று சக்ஸஸ் பார்ட்டி கொண்டாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது