நடிகர் தனுஷ் அலுலகத்தில் இருந்து வந்த தொலைபேசிக்கு பின்புதான், தன்னுடைய டிவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டது தனக்கு தெரிய வந்தது என பின்னணிப் பாடகி சுசித்ரா தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் பாடகி சுசித்ராவின் டிவிட்டர் பக்கத்தில் தனுஷ், ஹன்சிகா, த்ரிஷா, சூதுகவ்வும் கதாநாயகி சஞ்சிதா ரெட்டி ஆகியோரின் புகைப்படங்கள் வெளியாகி தமிழ் சினிமா உலகினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், பாடகி சின்மனி, அனிருத், ஆண்டிரியா, பார்வதி நாயர், அமலாபால் ஆகியோரின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அடுத்தடுத்து வெளியாகும் என அந்த டிவிட்டர் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது. இதில், சஞ்சிதா ரெட்டி மட்டும் அந்த வீடீயோவில் இருப்பது நான் இல்லை என மறுப்பு தெரிவித்துள்ளார்.

ஆனால், தன்னுடைய டிவிட்டர் கணக்கை யாரோ ஹேக் செய்து இந்த புகைப்படங்களை யாரோ வெளியிட்டு வருகிறார்கள். எனக்கும், அதற்கும் எந்த தொடர்பும் இல்லை என சுசித்ரா மறுத்தார். ஆனால், அவரின் கணக்கு ஹேக் செய்யப்படவில்லை என்றும், அவர் மனநிலை பாதிக்கப்பட்டிருப்பதாக அவரின் கணவன் கார்த்திக்குமார் கருத்து தெரிவித்திருந்தார். எனவே, இந்த விவகாரத்தில் குழப்பம் நீடித்து வந்தது.

இந்நிலையில், இந்த விவகாரம் பற்றி செய்தியாளர்களிடம் பேட்டி கொடுத்த சுசித்ரா கூறியதாவது:

இரண்டு நாட்களுக்கு முன், பாடல் ஒளிப்பதிவு முடிந்து இரவு வீட்டிற்கு வந்து தூங்கினேன். அடுத்த நாள் காலையில் நடிகர் தனுஷ் அலுகலத்திலிருந்து எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. என்னுடைய ட்விட்டர் கணக்கை யாரோ மீண்டும் ஹேக் செய்திருப்பதாக கூறினார்கள். அப்போதுதான் அந்த படங்களை பார்த்தேன். அந்தப் படங்களை அழிக்க முயற்சி செய்தேன்.

ஆனால், தொடர்ந்து படங்கள் பதிவு செய்யப்பட்டு வந்ததால் போலீசாரிடம் புகார் கொடுத்தேன். சிலர் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியை காட்ட என்னுடைய ட்விட்டர் பக்கத்தை பயன்படுத்துகிறார்கள். யாருக்கு யார் மீது பொறாமை, யாரை பழிவாங்க இதை செய்கிறார்கள் என்பது எனக்கு தெரியவில்லை” என அவர் கூறியுள்ளார்.