சுச்சி லீக்ஸ் சுசித்ரா என்ன செய்கிறார்? – கார்த்திக் வெளிட்ட வீடியோ

சில நாட்களுக்கு முன், பின்னணிப் பாடகி சுசித்ராவின் டிவிட்டர் பக்கத்தில் நடிகர், நடிகைகளின் சில அந்தரங்க வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனால், அந்த வீடியோக்களை தான் வெளியிடவில்லை, தனது டுவிட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டு விட்டதாக சுசித்ரா கூறியிருந்தார். அதே சமயம், சுசித்ரா மனநிலை பாதிக்கப்பட்டுள்ளார் என கார்த்திக் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். எனவே அந்த விவகாரத்தில் குழப்பம் நிலவியது.

அந்நிலையில், தனது கணவரை பிரிய உள்ளதாக சுசித்ரா பேட்டி கொடுத்தார். மேலும், சுசித்ராவின் கணவர் உள்பட யாருக்கும் சுசித்ரா எங்கே இருக்கின்றார் என்று தெரியவில்லை எனக் கூறப்பட்டது. மேலும், சுசித்ரா கடத்தப்பட்டதாக கூட கோலிவுட்டில் கிசுகிசுக்கப்பட்டது.

இந்நிலையில், சுசித்ராவின் கணவர் கார்த்திக் தனது முகநூல் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், அமெரிக்காவில் இருக்கிறேன். ஒரு புதிய காமெடி நிகழ்ச்சிக்கு கதை எழுதிக் கொண்டிருக்கிறேன். எதை பற்றி தெரியுமா எனக் கேள்வி கேட்டு விட்டு கேமராவை திருப்புகிறார். அங்கே சுசித்ரா இருக்கிறார். நீங்களே கெஸ் பண்ணுங்க எனக் கூறி கார்த்திக் ஒரு வில்லன் சிரிப்பை சிரிக்கிறார்.

இதன் மூலம், சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள சுச்சி லீக்ஸ் விவகாரத்தை காமெடி நிகழ்ச்சியாக கார்த்திக் தயாரிக்கப் போகிறார் என்பதும், சுசித்ராவும், அவரும் தற்போதைக்கு சந்தோஷமாகவே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் என்பதும் தெரிய வந்துள்ளது.

see the site and u update it